சாலைப்பணிகள்

ஆவடி நகராட்சி

 • TAMIL NADU URBAN ROAD INFRASTRUCTURE FUND (TURIF) என்ற திட்டத்தின் கீழ் ஆவடி நகராட்சி பகுதிகளில் 48 வார்டுகளில், ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 1௦2  சாலை பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது அதில் 54 சாலை பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டில் உள்ளது மீதமுள்ள 48 சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது
 • ஆவடி நகராட்சி பொது நிதியின் கீழ் ரூபாய் 57.5௦ லட்சம் செலவில் சாலை பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது

திருவேற்காடு நகராட்சி

 • திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் சாலை பயன்பாட்டிற்காக பொது நிதியின் கீழ் ரூபாய் 9 கோடியே 87 லட்சம் செலவில் சாலைபணிகள் மேற்கொள்ளபட்டது

திருநின்றவூர் பேரூராட்சி

 • திருநின்றவூர் பேரூராட்சி பகுதிகளில் 2 கோடியே 5௦ லட்சம் மதிப்பில் சாலை பணிகள் மேற்கொள்ளபட்டது

ஆவடி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 34 லட்ச மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ள பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது

ஆவடிசட்டமன்ற தொகுதியில் கடந்த ஒரு வருடத்தில் ரூபாய் 41 கோடியே 14 லட்சத்திருக்கு சாலை பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது

மின்சார பணிகள்
 • ஆவடி நகராட்சி

காமராஜர் சிலையில் இருந்து பருத்திபட்டு வரை பூந்தமல்லி சாலைகளின் மைய பகுதிகளில் , பொதுமக்கள் வசதிக்காக ரூபாய் 1 கோடி செலவில் 88 மின்கம்பங்களில்  176 விளக்குகள் பொருத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கபட்டது . மேலும் ரூபாய் 1 கோடி செலவில் திருமுல்லைவாயில் செட்போர்ட் மருத்துவமனையில் இருந்து ஆவடி பாபு ரெட்டி திருமணமண்டபம் வரை 88 மின்கம்பங்கள்  176 விளக்குகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகின்றது

 • திருவேற்காடு நகராட்சி  தெருவிளக்கு, மினி உயர் கோபுர விளக்கு அமைத்தல், போன்ற பணிகள் ரூபாய் 79 லட்சம் செலவில் மேற்கொள்ளபட்டது
 • தமிழ்நாடி மின்சார வாரியம்

ஆவடி நகராட்சி பகுதியில் மிட்டனமல்லி, மற்றும் திருமுல்லைவாயில் பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது அதன் அடிப்படையில் மிட்டனமல்லி பகுதியில் ரூபாய் 15 கோடியே 7 லட்சம் மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது, அதேபோல் திருமுல்லைவாயில் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது

 • சென்னை வர்தா புயலின் பொது சேதமடைந்த மரங்கள் மற்றும் குப்பைகளை உடனடியாக அப்புற படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன் மேலும் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக சீர்படுத்த மற்ற மாவட்டங்களை சேர்ந்த மின் பணியாளர்களை வரசெய்து சுமார் 800 க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை மாற்ற போர்கால நடவடிக்கை மேற்கொள்ளபட்டது
 • ஆவடி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3 லட்சத்து 9௦ ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
 • ஆவடிசட்டமன்ற தொகுதியில் கடந்த ஒரு வருடத்தில் ரூபாய் 17 கோடியே 86 லட்சத்திருக்கு மின்சார பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது
குடிநீர் பணிகள்
 • திருநின்றவூர் பேரூராட்சி பகுதிகளில் கோடைகால வறட்சியை போக்கும் விதமாக செயல்படாத அடிபம்புகள் மற்றும் மின்மோட்டார்களை சரி செய்வது, மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ரூபாய் 12 லட்சம் செலவில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளபட்டது.
 • ஆவடி நகராட்சி பகுதிகளில் குடி நீர் பணிகளுக்கு நகராட்சி பொது நிதியில் இருந்து ரூபாய் 32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் மின்மோட்டார்கள் சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளபட்டது மேலும் ரூபாய் 57 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிற்குரிய பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

கோடை கால வறட்சி நிலையை சமாளிக்க ரூபாய் 81 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் ரூபாய் 1 கோடியே 31 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான பணிகள் நடை பெற்று வருகின்றது.

 • திருவேற்காடு நகராட்சி பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் ரூபாய் 41 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான பணிகள் நடந்து முடிந்து மக்கள் பயன்அடைந்து வருகின்றனர், மேலும் வறட்சி நிலையை சமாளிக்கும் வகையில் ரூபாய் 1௦ லட்சத்திற்கு குடிநீர் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது
 • ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 26 லட்சம் 4௦ ஆயிரம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான பணிகள் செய்யபட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது

கடந்த ஒரு வருடத்தில் ஆவடி சட்டமன்ற தொகுதி முழுவதிலும் சுமார்

3 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மழைநீர் வடிகால்வாய்

ஆவடி சட்ட மன்ற தொகுதியில் மழைகாலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கும் பொருட்டு நெடுஞ்சாலையில் பட்டாபிராமில் இருந்து ஹிந்து கல்லூரி வரை மழை நீர் வடிகால்வாய் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் பணி செய்யப்பட்டுள்ளது, மற்றும் திருநின்றவூர் பகுதியில் CTH சாலையில் இருந்து ரயில்வே கடவு பாதை வரை ரூபாய் 1 கோடி 6௦ லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கபட்டுள்ளது

  • ஆவடி நகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய் பகுதியை துர்வருதல் மற்றும் புதிய கால்வாய் பணிகளை மேற்கொள்ள ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் நடந்துள்ளது மேலும் ரூபாய் 9 லட்சத்து 9௦ ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது

   

  • திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் அமைக்கபட்டுள்ள மழை நீர் கால்வாயில் மேற்புரத்தை சிமெண்ட் தளம் கொண்டு மூடும் பணிகளை மேற்கொள்ள ரூபாய் 56 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து முடிந்துள்ளது

   

  • ஆவடி சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சம் மதிப்பில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது

   

  கடந்த ஒரு வருடத்தில் ஆவடி சட்டமன்ற தொகுதி முழுவதிலும் சுமார்

  3 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மழை நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பாலங்கள்
 • ஆவடி சட்டமன்ற தொகுதியில் நெடுஞ்சாலை துறை மூலமாக திருவேற்காடு வேலப்பன்சாவடி பகுதியை இணைக்கும் தரை பாலத்திற்கு அருகில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக ரூபாய் 4 கோடியே 9௦ லட்சம் செலவில் புதிய மேம்பாலம் கட்ட பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது
 • பருத்திபட்டு வீரரகவபுரம் இடையே கூவம் ஆறு பகுதியில் கூடுதல் பாலம் கட்டும் பணி ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் கட்ட பட்டு மக்கள் பயன்பட்டிற்கு திறந்துவிட பட்டுள்ளது
 • ஆவடி காமராஜநகர் மற்றும் ஆயில்சேரி கூவம் ஆற்று பகுதியை இனைக்கும் பொருட்டு புதிய பாலம் கட்டும் பணி ரூபாய் 6 கோடியே 60 லட்சம் மதிப்பில் நடை பெற்று வருகின்றது
 • 2010 – 11ம் ஆண்டில் ஆவடி சட்டமன்ற தொகுதி, சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் பட்டாபிராம் அருகில் அமைந்திருக்கும் ரயில்வே கடவு பாதைக்கு ( LC 2 ) ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூபாய் 33 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கி,  நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டது, ஆனால் பாலம் அமைக்க ஒதுக்க பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் அப்பணி மேற்கொள்ள தொய்வு ஏற்பட்டது, அதனை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று மறு மதிப்பீடு செய்யவும் கூடுதல் நிதி ஒதுக்கவும் வலியுறுத்துபட்டது அதனால் 2016 – 17ம் ஆண்டில் ரூபாய் 52 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, தற்பொழுது ரயில்வே துறை பாலம் கட்டும் பூர்வாங்க பணியை துவங்கி உள்ளது, தமிழக அரசும் , நகராட்சி நிர்வாகமும் இப்பணி நடைபெற தேவையான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றது ( மாற்று சாலை, நில கையகபடுத்துதல், )
 • 2006 – 07ம் ஆண்டில் ஆவடி சட்டமன்ற தொகுதி, அம்பத்தூர் ஆவடி  ரயில்வே பாதைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் அன்னனூர் ரயில்வே கடவு பாதைக்கு  ( LC 7 ) மேம்பாலம் அமைக்க ரூபாய் 15 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கி,  நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டது, ஆனால் பாலம் அமைக்க ஒதுக்க பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் அப்பணி மேற்கொள்ள தொய்வு ஏற்பட்டது, அதனை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று மறு மதிப்பீடு செய்யவும் கூடுதல் நிதி ஒதுக்கவும் வலியுறுத்துபட்டது அதனால் 2017 – 18ம் ஆண்டில் ரூபாய் 52 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது,  தற்பொழுது ரயில்வே துறை பாலம் கட்டும் பணியை கட்டி முடித்துள்ளது, அதனை தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலை துறை இப்பால பணியை விரைந்து முடிக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது விரைவில் இப்பணி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வர அணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
 • 2006 – 07ம் ஆண்டில் ஆவடி சட்டமன்ற தொகுதி, CTH சாலையில் இருந்து சேக்காடு பகுதிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் ரயில்வே கடவு பாதையில் ( LC 9 ) தரைகீழ் பாலம் அமைக்க 2006 – 07ம் ஆண்டு ரூபாய் 8 கோடியே 55 லட்சம் நிதி ஒதுக்கபட்டது. ஆனால் தரை கீழ் பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் தொழில்நுட்ப காரணத்தினால் பணியை துவங்க காலதாமதம் ஏற்பட்டது, தற்பொழுது என்னுடைய  தொடர் வலியுறுத்துலால்  ரயில்வே துறை இப்பணிக்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது, விரைவில் ரயில்வே துறை பாலம் பணியை முடித்தவுடன் நெடுஞ்சாலைதுறை தனது பணியை துவங்கும்.
பள்ளிக்கல்வி துறை
 • ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெமிலிச்சேரி அரசு உயர்நிலை பள்ளிக்கு 1௦ வகுப்பறைகள் உட்பட ஆய்வகம், கழிப்பறை வசதிகள் மேம்படுத்த ரூபாய் 1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று முடிவடைந்து மாணவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்
 • ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 1௦ வகுப்பறைகள் உட்பட 2 ஆய்வகம் வசதிகள் மேம்படுத்த ரூபாய் 1 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று முடிவுவடைந்து மாணவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்
 • ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சி பகுதி அரசு உயர்நிலை பள்ளிக்கு 1௦ வகுப்பறைகள் உட்பட ஆய்வகம், கழிப்பறை வசதிகள் மேம்படுத்த ரூபாய் 1 கோடியே 6௦ லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று மாணவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்
 • திருவேற்காடு நகராட்சி அயனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைபள்ளிக்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிவறை அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது
 • ஆவடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி நகராட்சி பகுதி மூன்று நகர் பகுதியில் புதிய அரசு துவக்க பள்ளி அமைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கபட்டு பரீசிலனையில் உள்ளது
பொதுப்பணித்துறை
 • 2011 ம் ஆண்டு உருவாக்க பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு சட்ட மன்ற உறப்பினர் அலுவலகம் இல்லாத நிலை இருந்து வந்தது. அதனால் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை சட்ட மன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்க இயலாத சூழ்நிலையை இருந்தது. அக் குறையை போக்கும்விதமாக தமிழக அரசிடம் எடுத்துரைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டுவதற்கு ரூபாய் 23.5௦ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
 • ஆவடி சட்டமன்ற தொகுதி ஆவடி நகராட்சி பகுதியில் ரூபாய் 80 லட்ச மதிப்பீட்டில் அரசு சார்பு நிலை கருவுலம் கட்டபட்டு வருகின்றது
வருவாய்த்துறை
 • ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 7519 பயனாளிகள் ஓய்வூதியம் மற்றும் விதவை உதவி தொகை வாங்கி வருகின்றனர், 2016-17 ஆண்டுகளில் மட்டும் புதியதாக 829 பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆதி திராவிடர் நல துறை
 • ஆவடி சட்டமன்ற தொகுதி திருவேற்காடு நகராட்சி பகுதயில் ஆதிதிராவிட நலத்துறை மூலமாக ஆதிதிராவிட பெண்கள் நல விடுதி அமைக்க புரட்சி தலைவி அம்மா அவர்களால் 2௦15 ம் ஆண்டு ரூபாய் 1 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டது, ஆனால் இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட கால தாமத்தினால் இத் திட்டம் செயல்படாமல் இருந்தது அதனை அரசு அலுவலகர் தொடர் கவனத்திற்கு எடுத்து சென்று தற்பொழுது இடம் அயனபக்கம் அரசு மேல் நிலை பள்ளி அருகில் தேர்வு செய்து பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது.
பூங்கா மேம்பாடு
 • ஆவடி நகராட்சி பருத்திபட்டு பகுதியில் மத்திய அரசின் AMRUT ( Atal Mission for Rejuvenation and Urban Transformation ) திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ள பட்டு பணி நடந்து வருகின்றது
 • ஆவடி நகராட்சி பகுதிகளில் 2017 ம் ஆண்டு AMRUT ( Atal Mission for Rejuvenation and Urban Transformation ) திட்டத்தின் கீழ் 4 கோடியே 13 லட்ச ரூபாய்க்கு 7 இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைத்தல் மற்றும் பூங்கா தரம் உயர்தல் பணி மேற்கொள்ள முடிவு செய்யபட்டுள்ளது
நூலக துறை
 • திருவள்ளுவர் மாவட்ட நூலக துறை சார்பாக ஆவடியில் மின்னணு நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது அதனை சரி செய்யும் விதமாக சத்யமூர்த்தி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக்கி தர பள்ளிகல்வி துறையில் கோரிக்கை வைத்து இடம் ஒதுக்கி தரபட்டுள்ளது அவ்விடத்தில் விரைவில் மின்னணு நூலகம் கட்டுவதற்க்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்படும்
 • 2௦16 – 17 ம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஆவடி மற்றும் திருவேற்காடு நகராட்சி பகுதிகளுக்கு புதிய நூலக கட்டிடம் அமைக்க ரூபாய் 14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றது
மருத்துவ துறை
 • ஆவடி நகராட்சி பகுதிகளில் இரண்டு இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 85 லட்சத்திற்கு பணிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றது
போக்குவரத்து துறை
 • ஆவடி சட்ட மன்ற தொகுதி திருவேற்காடு நகராட்சி பகுதி கோலடி அருகில் அரசு போக்குவரத்துக்கு பேருந்து நிலையம் அமைக்க புரட்சி தலைவி அம்மா அவர்களால் 2௦12 ம் ஆண்டு அறிவிக்க பட்டது அதன் அடிப்படையில் நிலம் கையாக படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது
 • திருநின்றவூர் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எனது சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்க ஏற்பாடு செய்து உள்ளேன்
 • 2௦16-17 ம் ஆண்டு சட்டமன்ற உறப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 11 லட்சத்தி 5௦ ஆயிரம் மதிப்பீட்டில் ஆவடி நகராட்சி பகுதியில் 2 இடங்களிலும் திருவேற்காடு நகராட்சி பகுதியில் 1 இடத்திலும் பேருந்து நிழற்குடை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கபட்டுள்ளது
 • ஆவடி நகராட்சி மற்றும் திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவையான சிற்றுந்து புதிய வழிதடம் மற்றும் ஏற்கனவே உள்ள வழித்தடத்தை நீட்டிப்பு செய்ய கோரிக்கைகள் உள்ளது, அதனை அரசு மற்றும் அதிகாரிகளின் தொடர் கவனத்திற்கு எடுத்து செல்லபட்டுள்ளது, அதன் விளைவாக S46 சிற்றுந்து பேருந்து வழித்தடத்தை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளது மீதமுள்ள வழித்தடங்கள் நீட்டிப்பு செய்ய தொடர் வலியுறுத்தல் செய்யபட்டுவருகின்றது
ஆவடி சட்ட மன்ற தொகுதிக்கு சட்ட சபையில் 110 விதியின் கீழ் அறிவிக்க பட்ட திட்டங்கள்
 • மாண்புமிகு மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில் ஒன்றான பருத்திபட்டு ஏரியில் பறவைகள் வந்து செல்வதற்கு ஏற்ற இயற்கை சூழலுக்கு ஏற்ப ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ,தூர் வாருதல் , நீர்வரத்து வாய்க்காலை மேம்படுத்தி நீரியல் தரத்தை சீராக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள தொகை 28 கோடியே 16 லட்சத்தில் பணி ஒதுக்கப்பட்டு விரைவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ அவர்களால் துவங்கப்பட உள்ளது.
 • ஆவடி சட்ட மன்ற தொகுதி அரசு மருத்தவமனையை தரம் உயர்த்த சட்ட மன்றதில் நான் வைத்த கோரிக்கைக்கு புரட்சி தலைவி அம்மா அவர்களால் சுகாதார துறையின் கீழ் ஜப்பான் பன்னாடு முகமையுடன் இணைந்து சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று தெரிவுத்துள்ளார்,
 • புரட்சி தலைவி அம்மா அவர்களால் தொழில் நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த படும் என்றும் அதில் ஆவடி முருகப்பா பல்வகை தொழிநுட்ப கல்லூரியிலும் செயல்படுத்த படும் என்று அறிவித்துள்ளார்
 • மக்கள் பயன் பெரும் வகையில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று புரட்சி தலைவி அம்மா அவர்களால் அறிவிக்க பட்டது , அதன் அடிப்படையில் ஆவடி சட்ட மன்ற தொகுதி மக்கள் பயன்பாட்டிற்கு ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் அம்மா திருமண மண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்ய பட்டு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.

 

 • தமிழ்நாட்டில் 8 நகராட்சியில் உள்ள நகர் புற சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும் என்று புரட்சி தலைவி அம்மா அவர்களால்